Skip to content

விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தூர் அடுத்துள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

error: Content is protected !!