கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, சிறை வளாகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை கைதி தற்கொலை செய்து கொண்டதை கவனித்த சிறைக்காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறைக்குள் கைதி உயிரிழந்ததால், சட்ட விதிகளின்படி இந்த மரணம் குறித்து மேஜிஸ்திரேட் (நீதித்துறை நடுவர்) விசாரணை நடத்தப்பட உள்ளது.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? மன உளைச்சல் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து சிறைத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

