தமிழக அரசு “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் உயர்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு கல்லூரி மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் அவர்களின் டிஜிட்டல் கற்றலுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
கல்வி சிறக்க மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மடிக்கணினிகளை காண்பித்து நன்றி கூறிய கல்லூரி மாணவிகள், மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

