Skip to content

பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சதீஷ்குமார், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், உடல்நலக் குறைவால் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார், நேற்று தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!