ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியார் பொள்ளாச்சி சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து உலா வந்தது ஆழியார்

அணைப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையில் இருந்து வெளியேறி அணை பகுதிக்கு சென்றது இதனை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் இதனை தொடர்ந்து அங்கு வந்து வனத்துறையினர் சாலையில் யானையை கண்டால் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது மேலும் யானைக்கு தொந்தரவு செய்யும்படி நடந்து கொண்டால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

