ஈரானில் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட 31 மாகாணங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

