கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர்.
இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது. காரில் 2 பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக் கொண்டன. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
ஆம்புலன்ஸ் வேன் ரோட்டில் இருந்து அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்து நடந்ததை பார்த்த பொதுமக்கள் பேட்ரோல் போலீஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வரைந்து சென்று காயம் அடைந்து போராடியவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

