Skip to content

விஜயை ஒப்பந்தம் செய்ய பாஜக முயற்சி – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கோவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் கூடலூர் ராகுல் காந்தி வருகை முன்னிட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார் அவருக்கு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநில மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றினர் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகை தர உள்ளார். அங்கு பள்ளி நிகழ்ச்சியிலும், சமத்துவப் பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார் என்றார்.

நடிகர் விஜயை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இதற்காக பல்வேறு வழிகளில் ஒப்பந்தம் செய்ய முயற்சி நடக்கிறது என்றார். மேலும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பராசக்தி திரைப்படம் மற்றும் காங்கிரசார் பற்றி பேசியது தொடர்பாக அவர் அறிவில்லாமல் பேசுவதாகவும், நாகரீகமாக பேசத் தெரியாதவர் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலங்களில் எங்கெல்லாம் ஆட்சி நடக்கிறதோ, அந்த ஆட்சிகளில் காங்கிரசுக்கும் உரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். ஆனால், எங்கள் தலைமையகம் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, தேவையற்ற ஊகங்களுக்கு இடமில்லை என தெரிவித்தார்.

error: Content is protected !!