Skip to content

இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். சென்னையில் 20 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பகுதிநேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000 ஆக வழங்கப்படும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக, சட்டரீதியாக பேச்சுவார்த்தை நடக்கிறது. பகுதிநேர ஆசிரியர்களுடனான பேச்சுவார்தைக்குப் பின் அமைச்சர் அன்பின் மகேஸ் பேட்டி அளித்துள்ளார். பணியை உறுதிசெய்ய வேண்டும் என்பதுதான் பகுதிநேர ஆசிரியர்களின் முதன்மை கோரிக்கை என கூறியுள்ளார்.

error: Content is protected !!