Skip to content

ரூ.6000-ஐ தொட்ட ஆம்னி பஸ் டிக்கெட் விலை: அதிர்ச்சியில் சென்னை திரும்பும் பொதுமக்கள்

    பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டுத் திரும்புவதால், அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளன. குறிப்பாக, மதுரையிலிருந்து சென்னை வர ஒரு டிக்கெட் ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    பண்டிகை காலங்களில் நிலவும் இந்தத் துணிச்சலான கட்டணக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    error: Content is protected !!