பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த வழித்தடத்தை நாளை முதல் மூட மத்திய ரயில்வே துறை முடிவெடுத்த நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். சுமார் 10,000 மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடம் மூடப்பட்டால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும். சுமார் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி

ஊருக்குள் வரும் நிலை உருவாகும். நேர விரயம் ஏற்படுவதோடு யாருக்கேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் பல ஊர்களை சுற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வழித்தடத்தை மூடும்

நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும் எங்கள் கிராம மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சுரங்கப்பாதை அமைத்து கொடுத்த பின்னர் இந்த வழித்தடத்தை மூடினால் எங்கள் கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

