Skip to content

மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்

குடிக்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை ஏற்று கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதற்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சம்பா பருவத்துக்கு நெல் அறுவடை அந்த பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து இரு நாட்களாக குவித்து வைத்துள்ளனர் .மின் இணைப்பு வழங்கப்படாததால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் தேங்கியுள்ளது இதனால் விவசாயிகள் இரு நாட்களாக கொள்முதல் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர்.

error: Content is protected !!