தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். இந்த முறை NDA கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் பாஜக – பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, “புரட்சி பாரதம் NDA கூட்டணியில் தான் ஏற்கனவே இருக்கிறது. இன்று மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சரை சந்தித்து உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் புரட்சி பாரதம் உள்ளது. எத்தனை தொகுதி என்ன சின்னம் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் உடன் பேசி தான் முடிவு எடுக்கப்படும். சட்டபேரவை கூட்டத்தொடர் முடிந்து அவர்களிடம் பேச உள்ளோம். கடந்த முறை ஒரு இடம் தான் கொடுத்தார்கள். ஆனால் இந்த முறை கூடுதலாக கேட்க உள்ளோம். குறிப்பாக ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம். அதற்கான பணிகளை ஆறு தொகுதிகளிலும் பணியாற்றி வருகிறோம். அது குறித்து விரைவில் அதிமுக பொதுச்செயலாளரிடம் விரைவில் பேச உள்ளோம்” என தெரிவித்தார்.

