தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தமிழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமும் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட

செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
காவல்துறையினர் நவீன தொழிநுட்பம் மூலம் ஐ.எம்.ஈ எண் மூலம் செல்போன் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து மீட்டு, செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்ட காவல்துறையினர் உரிய

ஆவணத்துடன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

