Skip to content

ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் முப்பெரும் அம்பிகை ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியில், ஜவ்வாது மலை சந்தன மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள முப்பெரும் அம்பிகைகளான ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ நொண்டி மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறப்பாக யாகசாலைகள்

அமைக்கப்பட்டு, பல்வேறு ஹோமங்கள், அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் உள்ளிட்ட ஆன்மிக சடங்குகள் முறையாக நடத்தப்பட்டன.
மேலும் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை கோபுரத்தின் மீது

வைத்து, பக்தர்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, முப்பெரும் அம்பிகைகளின் அருள் தரிசனம் பெற்றனர். பக்தர்களின் “அம்மா” என்ற பக்தி முழக்கத்தால் ஆலய வளாகம் ஆன்மிக ஒளியால் களைகட்டியது

மேலும் இந்த விழாவை முன்னிட்டு, உள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அன்னதானத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த பழமையான ஆலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் ஒற்றுமையையும் ஆன்மிக நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக சிறப்பாக நிறைவு பெற்றது.

error: Content is protected !!