கோவையில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்த தகவல்களிக்கு விளக்கம் தந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆண்டு, சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவும்,ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் திட்டமிடும் என தெரிவித்த அவர், மதுரை மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம் என தெரிவித்தார். வழக்கத்துக்கு மாறாக தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் பரபரப்பு தொற்றி இருக்கின்றது எனவும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றனர் என தெரிவித்தார். ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து செய்தி வந்தபடி இருக்கின்றது எனவும், இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்பதாக செய்திகள் பரவியது எனக்கூறிய அவர், இதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கின்றேன் என தெரிவித்தார்.
கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என தெரிவித்த அவர், யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.வரும் சட்ட தேர்தலை கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகின்றோம் எனவும் கூறினார். புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஓரு வாரத்திற்குள் தெளிவுபடுத்துவோம் என தெரிவித்த அவர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருத்தனர், ஆனால் இப்போது அது போன்று இல்லை எனவும் தெரிவித்தார் புதிய தமிழகத்தை அதிகாரபூர்வமான முறையில் எந்த கட்சிகளும் அணுக வில்லை என தெரிவித்த அவர், வழக்கமான அணுகமுறைகள் இப்போது இல்லை எனவும் தெரிவித்தார்.
கூட்டணியில் பங்கு என்ற நிலைப்பாடுகளுக்குள் இப்போது நாங்கள் போக வில்லை என தெரிவித்த அவர், திறந்த மனப்பான்மையுடன் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.புதிய தமிழகத்தின்
மதுரை மாநாட்டின் 13 வது தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலக வில்லை என தெரிவித்த அவர், இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்ட மேடைக்கு நாங்கள் போகின்றோம் என்ற தகவல் வந்தது, 2 நாட்களாக வரும் அந்த செய்திகள் உண்மை இல்லை என்கின்றோம் என தெரிவித்தார். கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, நாங்கள் எந்த விதமான குழப்பத்திலும் இல்லை என தெரிவித்த அவர், தமிழகத்தில் 100 தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கின்றோம் எனவும், புதிய தமிழகம் கட்சி இல்லாமல், தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். யாரும் அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை எனக்கூறிய அவர், புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

