Skip to content

டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்

இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும் பாதிக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு மோடி தீர்வும் கொடுக்கவில்லை; வாய் திறக்கவும் இல்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார். 4.5 கோடி வேலை இழப்பு, லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. “மோடி! நீங்கள்தான் இதற்கு பொறுப்பு; இந்த பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்” என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

error: Content is protected !!