மதுராந்தகத்தில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கான வேலைகளை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் அல்ல, ஒரு மாநாடு. இந்த கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிக்கும் கூட்டம்.
திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். பிரதமர் மோடி வருகையால் தற்போது சூரியன் மறைந்துவிட்டது.. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறும் போது சூரியன் இல்லவே இல்லை தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் 100% உறுதியாக நடைபெறும். தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்கள் விரும்பும் நிரந்தர பிரதமர் மோடி மட்டுமே. வெல்லும் கூட்டணி, NDA கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி” என கர்ஜித்தார்.

