மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை இன்று மாலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பயணிகள் தங்கள் விமான பயண மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

