உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டத்தில் தனது பச்சிளம் ஆண் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். ஹரானா கிராமத்தைச் சேர்ந்த மம்தா தேவி என்பவர், தனது 6 மாதக் குழந்தையை அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், 24 மணி நேரத்திற்குள் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்ற தாய் மம்தா மற்றும் வாங்கிய அனிதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

