Skip to content

கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரையாற்றினார். அதில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ…”

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை அனைத்து வீடுகளும் பார்க்கின்றன.

2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.35 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களுக்கு ரூ.29 ஆயிரம் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் தலா ரூ.60 ஆயிரம் சேமித்துள்ளனர்.

சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த அரசு பொறுப்பேற்று, 1,724 நாட்கள் ஆகிறது. 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இதில் 8 ஆயிரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே வாழ்ந்தேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. ஒரே காரணத்தை திரும்ப திரும்ப கூறி சட்டசபையை விட்டு கவர்னர் வெளியேறி வருகிறார். கவர்னரின் செயல் வருத்தமளிக்கிறது.

1.கலைஞர் கனவு இல்லம்

கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்

  1. சாலைகள் மேம்பாடு

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டின் கீழ் ரூ.1,088 கோடியில் 2,200 ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

3.ஓய்வூதியம்

முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் உட்பட 1,80,000 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்

  1. சத்துணவு பணியாளர்கள்
  • சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கிராம ஊராட்சி செயலர்களுக்காக்ன ஓய்வூதியம் 2 ஆயிரத்தில் இருந்து 3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் பணியாளர்கள் உயிரிழந்தால், இறுதிச்சசங்குக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
  • அங்கன்வாடி உதவியளர்கள், சமையலர்கள், தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  1. பகுதி நேர ஆசிரியர்கள்
  • ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பும்போது, பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக வருவதற்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

error: Content is protected !!