மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். ஆர்.தர்மருக்கு கடந்த முறை ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த நவாஸ்கனி, தி.மு.க. கூட்டணியில் மக்களவை எம்.பி.யாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.தர்மர், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஓபி எஸ் ஆதரவாளர்கள் பலரும் பல்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் இன்று ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான தர்மர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து விலகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் தர்மர்.

