தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை தேடக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

