திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும்.
அதன்படி மலைக்கோட்டை வடக்கு பகுதி
12, 12A, 13, 13A (4 வட்டங்கள்)
மலைக்கோட்டை தெற்கு பகுதி
14, 14A, 15, 15A, 158, 17, 17A (7 வட்டங்கள்)
காந்தி மார்க்கெட் பகுதி
18, 18A, 19, 19A, 198, 20, 20A (7 வட்டங்கள்)
பாலக்கரை பகுதி
21, 21A, 30, 30A, 308, 31, 31A, 32, 32A, 50, 50A (11 வட்டங்கள்)
காஜாபேட்டை பகுதி
33, 334, 34, 34A, 49, 49A, 59, 59A (9 வட்டங்கள்)
ஏர்போர்ட் வடக்கு பகுதி
47, 47A, 48A, 63, 63A (4 வட்டங்கள்)
ஏர்போர்ட் தெற்கு பகுதி
61, 61A, 64, 644, 65, 65A (6 வட்டங்கள்)
உறையூர் பகுதி
8, 8A, 9, 9A, 10, 10A, 23, 23A (8 வட்டங்கள்)
தில்லைநகர் பகுதி
22, 22A, 29, 29A, 51, 51A, 52, 52A (8 வட்டங்கள்)
புத்தூர் பகுதி
24, 244, 25, 25A, 26, 26A (6 வட்டங்கள்)
ஜங்ஷன் பகுதி
11, 11A, 27, 27A, 28, 28A, 54, 54A (8 வட்டங்கள்)
கருமண்டபம் பகுதி
53, 53A, 55, 55A, 56, 56A, 57, 57A (8 வட்டங்கள்)
காஜாமலை பகுதி
58, 58A, 60, 60A, 62, 62A (6 வட்டங்கள்)
உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுபுதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மாவட்டம்
இதேபோன்று தெற்கு மாவட்ட அதிமுகவில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி
திருவெறும்பூர் பகுதி
38, 39, 39A, 40, 41 (5 வட்டங்கள்)
பொன்மலை பகுதி
34B, 35, 35A, 45, 45A, 46, 46A, 48 (8 வட்டங்கள்)
காட்டூர் பகுதி
37, 38A, 41A, 42A, 43, 43A, (6 வட்டங்கள்)
அரியமங்கலம் பகுதி
16, 36, 36A, 42, 44, 44A, 448 (7 வட்டங்கள்)
புதிய வட்டங்கள் பிரிக்கப்பட்டு
நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு
இதேபோன்று வடக்கு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டுபிரிக்கப்பட்ட பட்ட கலக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி மாநகர் மாவட்டம், வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுகவில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு இருப்பது அதிமுக நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

