தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.
46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,50,000 லட்சம் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 📌3000+ பேருந்து வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்துடன் 120 ஏக்கர் அளவில் நிகழ்ச்சி நடைபெறும் திடல் அமைந்துள்ளது.
📌ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்துவதற்கு டெல்டா மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
📌மாநாட்டு திடல் முழுவதும் திமுக ஆட்சியில் மகளிர் நலனை முன்னிறுத்தி செய்த சாதனைகள்,நலத்திட்டஙகளை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
📌மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 மாநாட்டில் கலந்துகொள்ளும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌வருகை தரும் அனைவருக்கும் சிற்றுண்டிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது மற்றும் அனைருக்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடையற்ற தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
📌மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதியம்/இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌400 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
📌மருத்துவ வசதிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மினி கிளினிக் மற்றும் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டிற்காக பெண்களுக்கென பிரத்தியேகமாக ஆண் மற்றும் பெண் என சுமார் 250 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
📌மாநாட்டில் மகளிர் மட்டும் பங்கேற்கும் பறையிசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் விழா மேடைக்கு அழைத்துசெல்ல மகளிர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌மாநாட்டில் நிறைவு நிகழ்ச்சியாக வாணவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு முழுவதும் 54 LED திரை வைக்கப்பட்டுள்ளது.

