தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் அருட்தந்தை முனைவர் அ. ஜான் சக்கரியாஸ் எ

ன்.சி.சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பின் தேசியக்கொடியை பறக்கவைத்துச் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை ம. ஆரோன் வாழ்த்துரை வழங்கினார்.
அகில இந்திய அளவில் மத்தியப் பிரதேசத்தில் போபாலில் நடைபெற்ற, பறக்கும் தட்டைச் துப்பாக்கியால் சுடும் போட்டியில் (trap Shooting )தமிழக அணியில் பங்கேற்று மூன்றாம் இடம்பெற்ற கல்லூரி இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு விலங்கியல் மாணவர் திரு.ஆரோன் பென்கர் விழாவில் விருது வழங்கிப் பாராட்டுப் பெற்றார்.
மாணவிகளின் நடனம், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழாவினை ஆங்கிலத் துறைத்தலைவர் ஜாய் பெய்த் தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் முனைவர் கரோலின் மேரி நன்றியுரை ஆற்றினார்.
கல்லூரியின் கலைப்புலத் தலைவர் ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

