கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் நடிகர் வாசு விக்ரம் உள்ளிட்ட கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .மேடையில் பேசிய சுப வீரபாண்டியன் பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகிகள் குறித்து திரைப்படத்தில் சித்தரித்தது குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.மேலும் மொழிப்போர் தியாகிகளின் உறவினர்களையும் மொழிப்போருக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், திமுக தான் அதிமுக தவெக பல்வேறு கட்சிகளுக்கு எதிரி எனும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜயின் கட்சி குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், புதிதாக கட்சி அமைத்திருக்கும் நடிகர் விஜய் இதுவரை எந்த கொள்கையை முன்னிறுத்தி இருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.பிஜேபி, அதிமுக கூட்டணி வலுவிழந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

