Skip to content

திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை மேலாளர்கள் ராமநாதன்(பணியாளர் மற்றும் சட்டம்) புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்). சுரேஷ் குமார் வணிகம்) ராஜேந்திரன்(கட்டிடம்) மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற தொழிலாளர் குழந்தைகளுக்கு தனித்திறன் வெளிப்படுத்தும் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளையும் அதிக டீசல் திறன் மிக்க ஓட்டுனர்களுக்கு பரிசுகளையும் சிறப்பாக பணிபுரிந்த நடத்தினர்கள் தொழில்நுட்ப பணியாளர் கிளை ஓட்டுநர் போதகர் பரிசோதகர்கள் அலுவலகப் பணியாளர்கள் கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர் பொறியாளர் கிளை மேலாளர் ஆகியோருக்கு தங்களுடைய திறமைகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக ஓட்டுநர்கள் 30 நபர்களுக்கும், நடத்துனர்கள் 30( நான்கு மகளிர் நடத்துனர் உட்பட ) நபர்களுக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் 17 நபர்களுக்கும், பணியாளர்களின் குழந்தைகள் 18 நபர்களுக்கு, பணியாளர்கள் நடைபெற்ற போட்டிகள் ஒன்பது நபர்களுக்கும், அலுவலகப் பணியாளர் ஒரு நபருக்கும் கண்காணிப்பாளர் ஒரு நபருக்கும்,பரிசோதகர் 2நபருக்கும், ஓட்டுநர் போதகர் ஒரு நபருக்கும், உதவி பொறியாளர் ஒரு நபருக்கும்,கிளை மேலாளர் ஒரு நபருக்கும் பாதுகாவலர் ஒரு நபருக்கும்,நான்கு மகளிருக்கும் ஆறுதல் பரிசு 10 நபர்களுக்கும் என மொத்தம் 126 நபர்களுக்கு தங்களது திறமைகளை பாராட்டி பரிசுகளை திருச்சிராப்பள்ளி மண்டல பொதும மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ராமநாதன், புகழேந்தி ராஜ், சுரேஷ் குமார், ராஜேந்திரன் மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!