திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு தெற்கு என பிரிக்க்பட்டு புதியதாக பகுதி செயலாளர்கள் , மற்றும் வட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எம்ஜிஆர் மன்றம் , எம்ஜிஆர் இளைஞர் அணி, ஜெ.பேரவை சிறுபான்மை இலக்கிய அணி, உள்ளிட்ட அணிகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார். இந்த அறிவிப்பிற்கு திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 18 வது வார்டு நிரவாகியான ஜெயக்குமார் வார்டுகள் பிரிக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியை வௌியிட்டதோடு 35 வருடமாக அதிமுகவில் இருந்து வருகிறேன். 5வது முறை வட்ட

கழக செயலாளராக இருந்தேன். இனி அந்த பொறுப்பை வேறு நபரை வைத்து கவனிக்க சொல்லுங்கள், நான் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அடிமட்ட தொண்டனாக இருக்க விரும்புகிறேன் என அறிவித்துள்ளார்.
அதேபோல் மலைக்கோட்டை பகுதி செயலாளருமான அன்பழகன் உள்ளிட்ட அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இன்று வௌியிடப்பட்டிருக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் முறையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு சென்றதாக தெரியவில்லை. எனவே தன்னிச்சையாக பட்டியல் வௌியிட்டு துரோக செய்த மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

