சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் மேலாண்மை பிரிவு பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
அதிமுகவை சீண்டிய விஜய்
கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், அதிமுகவை கடுமையாக சீண்டினார். “அண்டிப் பிழைக்கவோ, அடிமையாக இருக்கவோ நாம் அரசியலுக்கு வரவில்லை; என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் யார் என்ன தீங்கு செய்தாலும் அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து நம் மக்களை காப்பாற்றதான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம்” என்று கூறினார். மேலும், “ஊழல் செய்யவே மாட்டேன். முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களைப் போல் நான் ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியமே இல்லை” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
அதிமுகவின் கூட்டணி முடிவுகள் கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றும் மறைமுகமாக சாடினார்.விஜய்யின் உறுதிமொழி மற்றும் எதிர்கால திட்டங்கள்விஜய் தனது பேச்சில், “எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை” என்று கூறினார். “எதிர்காலத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பேன். இது ஒரு பிராசஸ், கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் ஊழல் நடந்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று உறுதியளித்தார். இதுவரை அதிகமாக அதிமுக பற்றி பேசாமல் இருந்த விஜய் இப்போது பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
அதிமுக பதிலடி
விஜய் பேசியதற்கு அதிமுக it wing தரப்பில் இருந்து பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…! தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா? நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…! கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….! நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக” எனவும் பதிலடி கொடுத்துள்ளது.

