தஞ்சையில் நடைபெறும் திமுக வின் டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வழங்க மட்டன் பிரியாணி சிக்கன் 65 தனி தனியாக ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை நடைபெறுகிறது.
இதில் தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர்

மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 46 சட்டமன்ற தொகுதியிலிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் மதிய உணவாக வழங்கும் வகையில் 2500 கிலோ ஆடு 2500 கிலோ கோழிக்கறியுடன் மட்டன் பிரியாணி சிக்கன் 65 முட்டை தால்சா. செய்யப்பட்டு ஹாட்

பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. இப்பணியில் சுமார் 200 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

