1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.

