Skip to content

ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 33 நிகழ்ச்சிகளில் பங்கேற்று செந்தில்பாலாஜியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை துவங்கி வைத்து வருகிறார். அதன் பகுதிகளான காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம், கவுண்டாயூர் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில், காவிரி குடிநீர் விநியோகம், காதப்பாறை ஊராட்சி,

கவுண்டாயூர் பகுதியில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அமைக்கும் பணி, காதப்பாறை ஊராட்சி, காமராஜ் நகரில், புதிய பகுதி நேர நியாய

விலைக் கடை, காதப்பாறை ஊராட்சி, முத்து நகர், வெண்ணைமலை மற்றும் சண்முகா நகர் ஆகிய மூன்று இடங்களிலும் தலா 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும், அருகம்பாளையத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் அமைக்கும் பணி, காதப்பாறை ஊராட்சி, நேதாஜி நகரில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் நேதாஜி நகரில், புதிய சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

error: Content is protected !!