திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்
காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-
காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அய்யானாபுரம் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் வரவேற்று பேசினார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், கண்ணன், ராம.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், திருச்சி-ஹவுரா விரைவு ரெயிலை

வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். திருச்சியில் இருந்து காலி தொடர் வண்டியாக வரும் உழவன் விரைவு ரெயில் பெட்டிகளை தஞ்சாவூர் வரை பயணிகள் பாஸ்ட் பாசஞ்சர் ரெயிலாக இயக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து நிஜாமுதீன் வரை புதிய ரெயிலை இயக்க வேண்டும். அல்லது தஞ்சையில் இருந்து புதிய ரெயிலாக செங்கோல் விரைவு ரெயிலாக புதுடெல்லி வரை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் திருமேனி, துணை செயலாளர்கள் உமர்முக்தர், முகமதுபைசல், ராஜேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

