இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு இன்று காலை
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள்வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை மாவட்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சார்ந்த அன்பழகன், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வினோத், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் அதிகாரிகள் சங்க இணை பொதுசெயலாளர் சாமிநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொது செயலாளர் யோகராஜ், தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் பொது செயலாளர் கமலவாசன் ,இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பை சார்ந்த புவனா, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த காசிராஜன், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொது செயலாளர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று மாவட்டத்தில் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன . பல கோடி அளவிலான பண பரிவர்த்தனைகள் முடங்கியது .

