ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் கருடாழ்வார் மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக என்ன பட்டது…
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா உற்சவம் தொடங்கி ஜனவரி பத்தாம் தேதி வரை நடைபெற்றது அதன்பின் நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் இன்று கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 2,09,49,903/-, வைந்த ஏகாதசி திருவிழா உண்டியல் மூலம் ரூ.6,46,644 பரமபதவாசல் சிறப்பு உண்டியல் மூலம்ரூ4,06,664 ஆக மொத்தம் ரூ . 2,20,03211 /-தங்கம் 156 கிராம், வெள்ளி 1310 கிராம், மற்றும் 436 வெளிநாடு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
இது ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் மிக அதிகபட்ச உண்டியல் காணிக்கையாகும். என்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

