Skip to content

அதிக கட்டணம் வசூல்.. தனியார் பஸ்சை வழிமறித்து வக்கீல் போராட்டம்

கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நகர பேருந்து ஒன்றில் காந்திபுரம் பகுதியில் இருந்து உக்கடம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில்

ஈடுபட்டார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று பிற்பகல் அந்த வழக்கறிஞர் காந்திபுரம் பகுதியில் இருந்து தனியார் நகர பேருந்தில் ஏறி ரயில் நிலையம் செல்வதற்காக பயண சீட்டு கேட்டுள்ளார்.

அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணமான ஏழு ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய்க்கான பயணச்சீட்டை நடத்துனர் கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த வழக்கறிஞர் 7 ரூபாய் கட்டணத்திற்கு எதற்காக பத்து ரூபாய் பயண சீட்டு கொடுக்கிறீர்கள் என கேட்கவே ரயில் நிலையத்திற்கான பயண கட்டணம் பத்து ரூபாய் என்றும் அனைவருக்கும் இதுதான் கட்டணம்

என்றும் நடத்துனர் கூறவே ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர் ரயில் நிலையம் பகுதியில் பேருந்து பயணிகளை இறக்குவதற்காக நின்றபொழுது தானும் இறங்கி அந்தப் பேருந்தை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் குறிப்பிட்ட அந்த பேருந்தில் வழக்கமாக இதே போன்று தொடர்ச்சியாக அதிக கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதாகவும் இதுபோன்று தொடர் மோசடி எழுந்துள்ளது.

error: Content is protected !!