Skip to content

15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்

தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் திடீர் மாயம்

திருச்சி பொன்னகர் 6 -வது குறுக்கு சாலையைச் சேர்ந்த சீதாலட்சுமி (46), ராஜேந்திரன் தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (19).. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிஹரசுதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.

திருச்சி வங்கி மேலாளர் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார் (30)., திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காப்பீட்டு பிரிவில் மேம்பாட்டு மேலாளராக வேலை செய்து வந்தார். தொடர்ந்து கடந்த 27-ம் தேதி அவர் கிளை மேலாளர் பாலகுமாருடன் திருச்சியில் வங்கியின் பிரதான பிரிவிற்கு வந்தார் .அப்போது அவர் வாடிக்கையாளர்களின் பணத்தில் ரூ. 15 லட்சம் முறைகேடு செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சிவகுமார் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தார். அதோடு அவர் திருச்சி வங்கி சார்ந்த குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்தார் .இந்த நிலையில் நேற்று கும்பகோணம் மண்டல பிரிவு மேலாளர் அரவிந்த் கிருஷ்ணன் சிவகுமாரை அழைக்க அவரது அறைக்கு சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது இது குறித்து கன்டோன்மெணட் போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( 58 ) இவரது மகன் ஸ்ரீராம் (227 மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஸ்ரீராம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர் மீது லாரி மோதி பெண் சாவு

திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரை சேர்த்தவர் சபியுல்லா (75) இவரது மனைவி ஜான் பேகம் ( 55 ). தம்பதி இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தென்னூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜான் பேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி, லாரி ஓட்டிய எடமலைப்பட்டி புதூர் ராஜு (60) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி ,ஸ்ரீரங்கம், கொள்ளிடம் கரை அருகே நேற்று கஞ்சா விற்பனை நடப்பதாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு அங்கு கஞ்சா விற்ற திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் பேங்கர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தாடி கோபால் ( 30 ) என்கிற வாலிபரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

error: Content is protected !!