Skip to content

தலையில் தையல் போட்ட சமையல் ஊழியர்- புதுகை ஜிஎச்-ன் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ள அரசு மருத்துவமனை ஒரு தாலுகா மருத்துவமனை. ஆலங்குடி மற்றும் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது நீண்ட நாட்களாக இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவமனையில் சமையல் வேலை செய்யும்  பெண் அந்த நபருக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்ததால், அவரை கொண்டு வந்த உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு   உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு உரிய மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!