Skip to content

ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்

இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதாரில், பிழைகளைத் திருத்துவதை எளிதாக்க ஆதார் ஆணையம் “e-Aadhaar App” எனும் புதிய செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லாமல், தங்கள் மொபைல் மூலமாகவே தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

இந்தச் செயலி வாயிலாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரியைத் தனிநபர்களே சுயமாகத் திருத்தம் செய்ய முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வரும் OTP மற்றும் ‘முக அங்கீகார’ (Face Authentication) வசதியைப் பயன்படுத்திப் புதிய எண்ணைப் பதிவு செய்யலாம். அதேபோல், உரிய ஆவணங்களைப் பதிவேற்றி முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கான கட்டணமாக 75 ரூபாய் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் நகல்களைப் பகிர விரும்பாதவர்கள், இந்த ஆப் மூலமாக ‘ஆஃப்லைன்’ முறையில் பாதுகாப்பாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தரவுப் பாதுகாப்பு (Privacy) உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!