தமிழகச் சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கி கடந்த 24-ஆம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் வரவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாக ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. ஒருவேளை தேதியில் மாற்றம் இருந்தால் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சபையை நடத்தவும் வாய்ப்புள்ளது.
தேர்தல் நேரம் என்பதால், மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக விவாதிக்கவும், புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் வரும் பிப்ரவரி 5 (வியாழன்) அன்று அமைச்சரவை கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

