மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட GRG திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசு வழங்கும் நிதியை 90 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்க வேண்டும் என மாற்றி அமைத்திருப்பதால், தமிழக அரசுக்கு மட்டும் சுமார் 7,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வளவு பெரிய தொகையை எந்த மாநில அரசும் ஏற்க முன்வராது. இதனால் இந்தத் திட்டம் தோல்வியடைந்து, ரத்தாகும் அபாயம் உள்ளது” என மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

