Skip to content

லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு கார் குவாலியர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். கார் மகராஜ்புரா என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்த நிலையில், அதில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!