Skip to content

பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அரசின் இலச்சினை (Logo) அல்லது தங்களது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!