குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக, பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பல காரணங்களால் பலரும் தங்கள் குழந்தைகளின் பெயரைச் சான்றிதழில் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்களின் நலன் கருதி, தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள், இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளின் பெயரைப் பிறப்புச் சான்றிதழில் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களைத் தொடர்புகொண்டு இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

