Skip to content

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு- பாடகி இரங்கல்

பழம்பெறும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார்.

எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் இறுதியில் தொடங்கினார். தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி, பின்னர் முழுநேர இசையமைப்பாளராக வளர்ந்தார்.1993-ம் ஆண்டு, ‘பைத்ருகம்’ மற்றும் ‘ஜனம்’ படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது எஸ்.பி. வெங்கடேஷ்க்கு வழங்கப்பட்டது. இது அவரது இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.

சென்னையில் காலமான எஸ்.பி. வெங்கடேஷின் இறுதிச் சடங்கு, சென்னையின் ஆலப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வருடம் பல பாடல்களுக்கு பணியாற்றிய பாடகி சுஜாதா மோகன் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் “இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு இசையமைப்பாளர் எஸ்பி வெங்கடேஷ் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மெல்லிசைகள் அழியாமல் நிலைத்திருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

error: Content is protected !!