கோவை, பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் அருகே சபரி ராஜ் என்பவர் தனியார் தோட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக தங்கவேல் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் பகல் முழுவதும் செம்பரி ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் தோட்டத்து பட்டியில் கட்டி விடுவதும் மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அவிழ்த்து விடுவதும் வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டிக்குச் சென்று பார்க்கும் பொழுது அங்கு மர்மமான முறையில் 28 ஆடுகள் வயிற்றில் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்கவேல் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கடித்தது சிறுத்தையா அல்லது மர்ம விலங்கா என்று கால் தடங்கலை கொண்டு தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது

