Skip to content

மகளிருக்கு போனஸ்.. காலையிலேயே 5000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி முடக்க பாஜக முயன்றது. அதை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து 5000 ரூபாயை இன்று காலையிலேயே 1.31 கோடி பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.

• அசாமிலும் தமிழ்நாட்டைப்போல பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. அங்கு விரைவில் நடக்கும் முக்கியப் பண்டிகையை முன்வைத்து ஒரு சிறப்புத் தொகுப்பாக பாஜக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமே தேர்தலைக் காரணம் காட்டி பாஜக குறுக்கு வழிகளில் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான திட்டத்தை வைக்கத் திட்டமிட்டிருப்பது தெளிவானது.

• அதேபோல், பீகார் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு 10000 ரூபாயை வழங்கியதைப் போன்று தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை நிறுத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. அதில் நிதி வழங்கும் திட்டத்துக்கு எதிரான தீர்ப்பு வந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதையும் உணர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

• மகராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பெண்களுக்கு நிதி வழங்கும் ’லட்கி பாகின்’ திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.

• இவை அனைத்தும் தமிழ்நாட்டின் தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகளாகும். அதை முன்னுணர்ந்தே மக்கள் பாதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் உடனடியாக 5000 ரூபாயை இன்றே பயனாளிகளுக்கு வழங்கியிருக்கிறார். அடுத்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாயாக உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

எப்படி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்துவார்கள் என்கிற விமர்சனங்களுக்கு

• திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கலைஞர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் 2 கோடி பேருக்கு நேரடியாக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

• திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்தது. இன்றைக்கு 16% வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது.

• இதே பொருளாதார வளர்ச்சிதான் அடுத்த ஆட்சியிலும் தொடரும். தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பதில் இன்னும் கூடுதலாக உழைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி இந்தத் திட்டங்கள் தொடர்வதை திராவிட மாடல் அரசு சாத்தியமாக்கும்.

error: Content is protected !!