கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் எல்.என்.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு கடந்த 6- ந்தேதி இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு சென்ற அவரை நோக்கி மர்மந பர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் பலத்த குண்டு காயமடைந்த அவர் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தந்தை நந்த குமாரும், தாயும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவரது உடலை பெங்க ளூருவுக்கு கொண்டு வருவதில் பல சிக்கல் இருந்ததாகவும், அதுபோல் நந்தகுமார் கனடா செல்ல விசா, பாஸ்போர்ட் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன் குமாருக்கு இறுதிச்சடங்கை கனடாவிலேயே நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கனடா லோட்டசில் சந்தன்குமாரின் உடல் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். தனது மகனின் இறுதிச்சடங்கை பெங்களூரு தியாமகொண்டலுவில் உள்ள வீட்டில் இருந்தபடி செல்போனில்
ஆன்லைனில் வீடியோ அழைப்பில் பார்த்து நந்தகுமார் கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது பார்ப்போதை நெஞ்சை பதற வைத்தது.

