Skip to content

வழக்கம்போல் பிஜேபியை பத்தி சேலத்திலும் பேசாத விஜய்

தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வர 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு தினங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

மேலும், மாநகர காவல்துறையினரும், திடலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள ஊத்துமலையின் மீது யாரும் ஏறக்கூடாது என்பதற்காக அந்த மலையை சுற்றிலும் உறுதியான தடுப்புகள் அமைத்தும், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு விஜய் வருகிறார். அதன்பின் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக கூட்டத்தை நிறைவு செய்யும் விஜய் 2.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். காமலாபுரத்தில் இருந்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் சிலநாயக்கன்பட்டி வரை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காமலாபுரத்தில் இருந்து மாநகர எல்லையான தண்ணீர் தொட்டி வரை கூடுதல் எஸ்பிக்கள் சோமசுந்தரம், செல்வராஜ் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் ஏட்டுகள் என 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதே போல், சேலம் காவல் ஆணையர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரன் தலைமையில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.

விஜய் வீட்டை விட்டு வெளியே வா என சொல்பவர்களுக்கு என் வீடு எது என தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய விஜய், “தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலம். எனக்கு அது தான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கின்றனர். அனைவரும் என் உறவு என் சொந்தம்.8 கோடி மக்களுக்கு உடன் இருக்க போவது நான்தான்” என்றார்.

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை.. எங்கள் உரிமையை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான்.. வேறு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார்.

விஜய் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டு வந்துள்ளேன். விஜய் அரசியலுக்கு வந்தது தப்பா? மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த இடம் கொடுப்பார்கள், ஆனால் நமக்கு இடம் தர மறுக்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் SOP என்பார்கள். ஆனால் இங்கு Stalin Sir operating procedure ஆக இருக்கிறது” என்று விமர்சித்தார்.Self-ஏ எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு வேலைக்கே ஆகாது என்றும் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கணக்கெல்லாம் இனி நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டும் தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? என்று திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு விஜய் சவால் விடுத்தார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மறந்து விட்டு, நம்மை அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். அனுபவம் இல்லை தான், கொள்ளை அடிப்பதில் எல்லாம் அனுபவம் இல்லைதான். சுட்டுப்போட்டாலும் வராது. கொள்கையை பெயரளவில் வைத்துக் கொண்டு நேரடியாக மறைமுகமாக சரண்டர் ஆகும் அனுபவம் எல்லாம் வராது.

எங்கள் ஓட்டுமட்டுமல்லாது உங்கள் குடும்பதினரையும் தவெகவுக்கு வாக்களிக்க வையுங்கள்.” என்று கேட்டுக்கொண்டார்.

“எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. மற்றவர்களை போல வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை” என்றும் விஜய் விளக்கம் கொடுத்தார்.

“அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என கேட்பவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறு அனுபவம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பிய விஜய், “கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை” என்று தெரிவித்தார்.

”அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அரசியல்வாதிகளா இருப்பவர்களுக்கு ஒரு சவால். என்னை மாதிரி தனியா நின்று 1% வாக்கு வாங்க தில் இருக்கிறதா? என்றவர், “

2 வருஷத்தில் முதன்மை சக்தியா வளர்ந்து 30% மக்கள் ஆதரவை பெற்றுள்ளோம்

கட்சி ஆரம்பத்தை அண்ணாவை, எம்.ஜி.ஆர்,. ஜெயலலிதாவை மறந்து விட்டு நமக்கு அனுபவம் இல்லை என்கின்றனர்” என்று சுட்டிக்காட்டினர்.

அதிகாரத்தை வைத்து பணத்தை கொள்கை அடித்ததை தவிர வேறு என்ன அனுபவம் இருக்கிறது. அடுத்தவங்கோட கட்சியில் இருப்பவர்கள்,என்னை மாதிரி தனியா கட்சி ஆரமிக்க இரண்டே ஆண்டில் 30 சதவீதம் வளர்ந்து இருக்கின்ற நமக்கு அனுபவம் இல்லையா” என்றும் அவர் விமர்சித்தார்.

நல்லாட்சி வழங்க மேதாவிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர்., மக்கள் சக்தியின் துணையால், மக்கள் மேல் அக்கறை கொண்ட அதிகாரிகளின் துணையால் சூப்பரான ஒரு நல்ல ஆட்சி என்னால் கொடுக்க முடியும். செய்து காட்டுகிறேன் என்று விஜய் உறுதி கூறினார்.

error: Content is protected !!